இன்னிக்கு நைட் பாஸ்தா செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
பாஸ்தா 250 கிராம்
தக்காளி 400 கிராம்
வெங்காயம் 75 கிராம்
பூண்டு 2 பெரிய பல்லு
காய்ந்த துளசி இலை அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
கருப்பு மிளகு நுணுக்கியது அரை ஸ்பூன்
ராஜ இறால் 100 கிராம்
சீஸ் 100 கிராம்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
எண்ணெய் 1 ஸ்பூன்
ஆவிவ் ஆயில் 2 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உரித்து நறுக்கிக் கொள்ளவும்.
சீஸ் துருவி எடுத்துக் கொள்ளவும்.
இறாலை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு பாஸ்தா வேகும்வரை வேகவைத்து நீரை வடிகட்டி தனியே வைக்கவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கி பின் துளசி இலை, உப்பு, நுணுக்கிய மிளகு, மிளகாய்த்தூள், ராஜ இறால் சேர்த்து நன்றாக கலந்து கிளறவும்.
வேகவைத்த பாஸ்தா சேர்த்து கலந்து துருவிய சீஸ் சேர்த்து கிளறவும்.
அனைத்தும் நன்றாக திரண்டு பச்சை வாசனை போகும் வரை வந்ததும் ஆலிவ் ஆயில் ஊற்றி கிளறவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.