கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கு..!! பாய்ந்த குண்டார் சட்டம்..!! சிபிசிஐடி அதிரடி..!!
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் உள்பட 76 பேர் பரிதாபமாக உயிாிழந்தனா். 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்…
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது…
பின் காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமர் உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.. அதனை தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன் மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயபாளையம் ஆகிய 3 காவல் நிலைய வழக்குகளும், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 22 பேரில் 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க கோரி சிபிசிஐடி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..
அதன் பேரில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, மாதேஷ், சிவகுமார், ஜோசப் மற்றும் ஏழுமலை ஆகிய முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், தற்போது ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது…
இதுவரை இந்த வழக்கில் 8 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்படுள்ள நிலையில்., மீதமுள்ள மற்ற குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..