90’s கிட்ஸ் ஃபேவரட் தேன் மிட்டாய் செய்யலாமா…!
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 2 கப்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தை நன்றாக சுத்தம் செய்து 2 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின் ஊற வைத்ததை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி பேக்கிங் சோடா மற்றும் ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து 2 கப் சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்ததும் இறக்கி வைத்து பொரித்த உருண்டைகளை இதில் போட்டு 2 மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும்.
பின் அதன் மீது சர்க்கரையை தூவி கொள்ளலாம்.
அவ்ளோதான் இப்போ தித்திப்பான தேன் மிட்டாய் ரெடி.