திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராஜினாமா..! பரபரப்பான நெல்லை..!
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி பதவி ஏற்றார். அவர் பதிவியேற்ற நாளில் இருந்தே ஒரு சில கட்சியினருக்கும் இவருக்கும் இடையே மோதல் இருந்ததாக சொல்லப்படுகிறது.. சில கூட்டங்ககளிலும் இவர் பங்கேற்றது இல்லை என சொல்லப்படுகிறது..
இந்நிலையில் மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 35க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் தீர்மானத்திற்கான வாக்கெடுப்புகள் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.
பின் உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த இரண்டு கூட்டங்களிலும் மோதல்
அதிகமானது..
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாததால், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது அதன் மேயர் சரவணன் மாமன்ற கூட்ட அவை விட்டு வெளியேறினார்.
சென்னைக்கு அவசர அழைப்பு :
இந்நிலையில் திமுக தலைமை நேற்று திருநெல்வேலி மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்தது அங்கு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை சந்தித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட பேச்சுவார்க்கைக்கு பிறகு அவரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. மேலும், தலைமையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நெல்லை மேயர் ராஜினாமா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் முறைப்படி மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். என சொல்லப்படுகிறது.. மேயர் சரவணனின் ராஜினாமா தற்போது பரபரப்பாகியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ