சுவையான காளான் புலாவ் ரெசிபி..!
காளான் என்பது ஒரு சத்தான ஆரோக்கியமான உணவாகும். காளான் என்பது சைவ பிரியர்களுக்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் ஆகும். அசைவத்தில் கிடைக்கும் சுவையானது இந்த காளானில் இருக்கிறது. காளான் வைத்து பலவித உணவுகள் சமைக்கலாம். இப்போ நம்ம காளான் வைத்து ஒரு புலாவ் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- காளான்: 250 கிராம்
- பன்னீர்: 250 கிராம்
- காலிஃபிளவர்: 1/2 கப்
- குடைமிளகாய்: 2 கப்
- வெங்காயம்: 2
- பச்சை மிளகாய்: 6-10
- அரிசி: 2 கப்
- இலவங்கப்பட்டை: நறுக்கியது
- கிராம்பு: 4-6
- பாலக் இலைகள்: 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்: 2 டீஸ்பூன்
- பூண்டு 1 டீஸ்பூன்
- நெய்: 1 டீஸ்பூன்
- எண்ணெய்: போதுமானது
செய்முறை:
- முதலில் அரிசியை நன்றாக கழுவி நீரில் சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
- பின் அதனை வேகவைத்து வடித்து தனியே வைக்க வேண்டும்.
- பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம், காலிஃபிளவர், கேப்சிகம், காளான் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, பாலக்கீரைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் இஞ்சி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் பன்னீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.
- அடுத்ததாக பச்சை மிளகாய், காலிஃபிளவர், காளான் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறி விடவும்.
- அவ்வளவுதான் டேஸ்டியான காளான் புலாவ் தயார்.
- இந்த காளான் புலாவ் ரொம்ப ஈசியா டக்குனு செய்துடலாம். குழந்தைகளுக்கு லஞ்சு பாக்ஸ்க்கு செய்து கொடுக்கலாம்.
