ஆறு மாத குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கலாமா..?
பெற்றோர் களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. எந்த வயதில் என்ன என்ன ஊட்டச்சத்துக்கள் கொடுக்க வேண்டும், என்ன வகையான உணவுகள் கொடுக்க கூடாது என்பது பற்றி பல கேள்விகளும் இருக்கும்..
உங்களின் கேள்விகளுக்கு பதில் இதோ
* ஆறு மாதத்தில் இருந்து ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால், உப்பு, சர்க்கரை மற்றும் கீரிம் பிஸ்கட்கள் தரக்கூடாது.
* ஒரு சில பிஸ்கட்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்.., குழந்தைகளுக்கு செரிமானம் அடையச்செய்யாது.
* சில பிஸ்கட்களில் சேர்மான பொருட்கள் அதிகமாக இருக்கும். ரீஃபைண்டு ஃப்ளார் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு பயன் படுத்தப்பட்டிருப்பதால், குழந்தை வயிற்றுக்கு பசி எடுக்க வைக்காது.
* பிஸ்கட்டில் உள்ள சோடியம் டிரான்ஸ்ஃபேட் குழந்தையின் உடலுக்கு ஏற்றதாக இருக்காது. இதனால் குழந்தையின் உடலை அதிகம் பாதிக்கும்.
* குழந்தையின் குடல் இயக்கம் பாதிக்கப்பட்டு செரிமானம் ஆகவிடாமல் தடுக்கும்.
* பிஸ்கட்டில் அதிகம் வெள்ளை சர்க்கரை இருப்பதால், உடல் பருமன் அதிகமாக காணப்படும். மேலும் பற்களில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post