கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு..! கர்ப்பக்காலத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான ஒன்று, அந்த காலத்தில் நீங்கள் தெரியாமல் செய்யும் சில சிறு தவறு கூட குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி நீங்கள் தெரியாமல் செய்யும் சில தவறுகள் பற்றி பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் அதிக நேரம் தூங்க வேண்டும். கர்ப்பகாலத்தில் உடல் அசெளகரியமாக இருக்கும், அந்த சமயத்தில் தூங்க செல்லும் பொழுது ஒரு சிலருக்கு தூக்கம் வராது, குறைந்தது 8 மணி நேரமாவது கர்ப்பிணி பெண்கள் தூங்க வேண்டும்.
இல்லையேல் தூக்கம் கெடுவதால், குழந்தைக்கு அதிக மன பதட்டத்தை ஏற்படுத்தும். குழந்தையின் தூக்கத்தையும் அதிகம் கெடுக்கும்.
தூக்கமின்மை காரணத்தால் இரத்த சர்க்கரை அளவு இரத்த அழுத்தத்தின் அளவு மாறுபடும். இதனால் அதிக சோர்வும் ஏற்படக்கூடும்.
கருவுற்ற மாதத்தில் இருந்து முதல் மூன்று மாதத்திற்கு அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் விட்டால் இதனால் ஏற்படும் விளைவு குழந்தையை அதிகம் பாதிக்கச் செய்யும்.
கர்ப்பகாலத்தில் நாம் செய்யும் அனைத்து செயலும், பேசும் அனைத்து பேச்சும் குழந்தையின் மூளைக்கு எட்டும், நீங்கள் சந்தோஷமாக இருந்தால் குழந்தையும் சந்தோஷமாக இருக்கும், நீங்கள் கவலை கொண்டால் குழந்தையும் கவலைகொள்ளும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..