சென்னை மெரினாவை சூழ்ந்த மழைநீர்…!! பொதுமக்களுக்கு விதித்த தடை…!!
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது..
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு மட்டுமின்றி மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..