திருடர்களுக்கு ரஜினி சப்போர்ட் பண்றாரா..? ரஜினியை விளாசும் ரோஜா..!!
ரஜினிகாந்த் ஏன் திருடர்களுக்கு ஆதரவு தருகிறார், என பிரபல நடிகையும் ஆந்திர அமைச்சருமான “ரோஜா” கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்ததை தொடர்ந்து, அவரது மகனும் ரஜினிகாந்த் ஆறுதல் கூறிய நிலையில் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பேசியுள்ளார். 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தெலுங்கு தேச கட்சியின் தலைவராக இருந்த போது ரூபாய் 550 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பெயரில் அவர் செப்டம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவலை கேட்ட நடிகர் “ரஜினிகாந்த்”, சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். என்னுடைய நண்பன் (சந்திரபாபு நாயுடு) எந்த தவறையும் செய்திருக்கமாட்டார்.
பொய் வழக்குகள் அவர் மீது எதுவும் செய்யாது. அவரது தன்னலமற்றவர் அவரை நிச்சயமாக வெளியே விடுவிக்க படுவார், தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து விடுவிக்க படுவார் என நடிகர் ரஜினிகாந்த், மொபைலில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு “ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின்” முன்னணி தலைவரும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான “நடிகை ரோஜா“, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால், திருடர்களுக்கு ஏன் ரஜினிகாந்த் ஆதரவு தருகிறார்..? அவர் மீது இருந்த மரியாதையே போய் விட்டது. மக்களுக்காக போராடி சிறை சென்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தால் அனைவரும் நல்ல விதமாகப் பேசுவார்கள்.
ஆனால், மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பிருந்தும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லலை? என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என்பது அனைவருக்கும் தெரியும்.
சந்திரபாபு நாயுடு நல்லவர் என யாரும் நம்ப மாட்டார்கள். தவறு செய்தவர்களுக்கு தாமதமானாலும் தண்டனை கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post