முட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா ..?
முட்டை குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு புரதச்சத்து நிறைந்த ஒரு உணவு பொருள்.., முட்டை வைத்து பல விதமான உணவுகள் சமைக்கலாம். எந்த வயதினரும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி நன்மை தரும் முட்டையின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
* முட்டையின் வெள்ளைக்கருவில் அதிக அளவு புரதச்சத்தும், மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்புச்சத்தும், நிறைந்து இருக்கும்.
* முட்டையில் வைட்டமின் பி12, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.
* மிக மெல்லிய உடல் எடை கொண்டவர்களும் மற்றும் ஜிம் செல்பவர்களும் தினமும் காலை ஒரு வேகவைத்த முட்டை எடுத்துக்கொள்வது சிறந்தது.
* முட்டையின் மஞ்சள் கருவில் 180 கிராம் வரை கொழுப்புச்சத்து இருப்பதால், சர்க்கரை நோய் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் முட்டை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
* கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையின் நரம்பு பகுதியை வளரச்செய்கிறது.
* குழந்தைகள் தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொண்டால். அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை கொடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post