குடவாழை அரிசியில் இவ்வளவு பயன்களா..!!
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் குடவாழை அரிசியும் ஒன்று. இவை கடலோர பகுதியிலும், உப்பு நீர் இருக்கும் இடத்தில் மட்டுமே விளைச்சல் ஆகும்.
இதனை நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் அதிகம் பார்க்கலாம். இந்த வகை அரிசிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். விதை விதத்தை நாளில் இருந்து 130 நாட்களிலே அறைவடை செய்து விடலாம்.
பயன்கள் :
* குடவாழை அரிசியை, அரிசியாக பொங்க வைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* இவை விரைவில் செரிமானம் ஆவதால், வயதானவர்களுக்கும் மன வளர்ச்சி குன்றியவர் களுக்கும் கொடுக்கலாம்.
* படை, தேம்பல் மற்றும் தோல் சம்மந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
* முக்கியமாக குடைவாழை அரிசியை தொடர்ந்து மூன்று வேலையும் சாப்பிட்டு வந்தால் நிரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
* வயிறு மற்றும் குடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே குணமாகி விடுவார்கள்.
* குடவாழை அரிசியில் நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை அளவை குறைத்து உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி
Discussion about this post