கோடையில் கண் பராமரிப்பு – இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..?
கோடையில் நம் சருமத்திற்கு காட்டும் அக்கறையை கண்களுக்கும் காட்ட வேண்டும். காரணம், கோடையில் அதிக வெப்பதால் கண்ணீரை வேகமாக ஆவியாக்குகிறது. இதனால் உடல் ஒவ்வாமை மற்றும் நீரிழப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
கண் வறட்சி : வெப்பத்தால் கண்களில் நீர் வேகமாக ஆவியாகி விடும். இதனால் கண்களில் எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய அதிக நேரம் மொபைல் போன், தொலைக்காட்சியில் நேரம் செலவிடாமல் இருப்பது நல்லது.
ஒவ்வாமை : கண் ஒவ்வாமைக்கு அதிக வெப்பமும், தூசியும் தான் காரணம். இதனால் கண் அரிப்பு, கண் சிவத்தல், கண் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய சன் கிளாஸ் களை பயன் படுத்தலாம்.
கண்கட்டி : பொதுவாகவே பல குழந்தை களுக்கு கண்கட்டி ஏற்படுகிறது, இந்த கண் கட்டியானது கண் இரப்பைக்கு உள்ளே காணப்படும். கண் வீக்கமாகவும், கண்கள் சிவந்தும் காணப்படும்.
இதனை சரி செய்ய, பின்வரும் குறிப்புகளை பின்பற்றினாலே போதும்.
* கண்களை அடிக்கடி தொடவோ அல்லது தேய்க்கவோ கூடாது.
* மற்றவர்கள் பயன் படுத்திய கைக்குட்டை, துணி போன்ற வற்றை பயன் படுத்தக்கூடாது. அது உறவினராக இருந்தாலும் நண்பராக இருந்தாலும்.
* குளம், ஏறி மற்றும் நீச்சல் குளத்தில் நீந்தும் பொழுது, நீச்சல் கண்ணாடி அணிந்து இருக்க வேண்டும்.
* வெயிலில் வெளியே செல்லும் நேரங்களில் UV சன் கிளாஸ் களை பயன் படுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post