தேங்காயில் இவ்ளோ நன்மைகளா..?
தேங்காய் நம் வீடுகளில் தினசரி பயன்படுத்தப்பட்டு வரும் பொருள் தான் . இவை நம் முன்னோர்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தினார்கள் . தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன.
இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக தேங்காயில் காப்பர், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, செலினியம், ஜிங்க் போன்றவை அதிகமாக இருக்கும் . மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்திருக்கும் . அதோடு ஃபோலேட், வைட்டமின் சி, தையமின் போன்றவைகளும் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய தேங்காயை தினமும் நாம் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை தடுக்கலாம். இப்படி தினமும் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.அவற்றை பார்க்கலாம் .
உடல் எடையை குறைக்க உதவும் . தேங்காயை சாப்பிடும் போது, அது பசியைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர, இரது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் தேங்காயில் ஆன்டி-பாக்டீரயல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கும். எனவே தேங்காயை உட்கொள்ளும் போது, அது உடலை பாக்டிரியாக்கள், பூஞ்சைகளின் தாக்குதலைத் தடுத்து, உடலை வலிமையாக வைத்துக் கொள்ளும் . நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ,
இதய நோய் தடுக்கப்படும் தேங்காயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, உடலில் இரத்த கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்தும். உடலில் நல்ல கொலஸ்ட்ரால் சிறப்பான அளவில் இருந்தால், இதய நோயின் அபாயம் குறையும்.
எலும்புகள் மற்றும் பற்கள் வலுபெற :
தேங்காயை தினமும் சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுபெறும். , அதில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தை அதிகமாக உறிஞ்ஜும் . உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சிறப்பான அளவில் இருந்தால், எலும்புகளும், பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், அது பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வரக்கூடாதெனில் தினமும் தேங்காய் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் கட்டுப்படும் தேங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் சர்க்கரை நோயாளிகளின் சிறந்த ஸ்நாக்ஸாக தேங்காய் விளங்கும். தேங்காயானது உடலில் உள்ள ஹார்மோன்களில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எளிய வழியில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தேங்காயை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..