ரிச்சான பன்னீர் பட்டர் மசாலா…!
வெண்ணெய் 2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பூண்டு 8 பற்கள்
சீரகம் 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் 2 நறுக்கியது
பச்சை மிளகாய் 3 கீறியது
தக்காளி 3 நறுக்கியது
முந்திரி
முலாம்பழ விதைகள் 2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் 6
உப்பு தேவையானது
தண்ணீர்
பன்னீர் 400 கிராம்
வெண்ணெய் 2 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர்
சர்க்கரை 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
கசூரி மேத்தி
உப்பு தேவையானது
ஃபிரஷ் கிரீம்
கொத்தமல்லி இலை
ஒரு வாணலில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி இஞ்சி,பூண்டு, சீரகம்,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் தக்காளி,முந்திரி,முலாம்பழ விதைகல்,காஷ்மீரி மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் ஆற வைத்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் வெண்ணெய்,எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய்,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து சிறிது வதக்கி கொதிக்க வைக்கவும்.
பின் சர்க்கரை,கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
உப்பு சரிபார்த்து, மசாலாவில் ஒரு 50 கிராம் பன்னீரை துருவி போடவும்,மேலும் பன்னீர் துண்டுகளை போட்டு 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
கடைசியாக இதில் ஃபிரஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலை தூவவும், மேலும் கசூரி மேத்தி இலை கசக்கி தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் ரிச்சான பன்னீர் பட்டர் மசாலா தயார். இது சப்பாத்தி, பூரி, தோசை,இட்லி மற்றும் பரோட்டாவிற்கு சுவையாக இருக்கும்.