ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவிக்கு தொடர்பா!… சிக்கியது ஆதாரம்.!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.., அதன் பின் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆற்காடு சுரேஷின் மனைவி ஆந்திரவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோரை செம்பியம் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பில் இருந்த சிவா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்றொரு ரவுடியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்பும், வெளிநாடு செல்தற்கு முன்பு யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை குறித்த பட்டியலை காவல் துறையினர் தயாரித்தனர்.
அதில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்தது தெரியவந்தது.
பின்னர் மோனிஷாவிடம் இது குறித்து விசாரித்த போது வழக்கறிஞர் கிருஷ்ணன் தனது தோழன் என்று கூறிய அவர் அது தொடர்பான புகைப்படத்தை காட்டியுள்ளார். தொடர்ந்து தான் வழக்கு ஒன்று தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் தொடர்ந்து பேசி வந்ததாக” விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் நெல்சனின் மனைவி மோனிஷா குறித்து பரபரப்பான தகவல் வெளியாகியது. அதாவது நெல்சன் மனைவியின் வங்கி கணக்கை தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாகியுள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளது அம்பலமானது.
மேலும் நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த
ரூ.75 லட்சம்,எதற்காக அனுப்பட்டது என்றும் அல்லது அந்த பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?” என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் திவீர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்