குழந்தைகளுக்கு பிடித்த காலிஃபிளவர் பஜ்ஜி..!
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் 400 கிராம்.
கடலை மாவு 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
அரிசி மாவு 1 1/2 ஸ்பூன்
கார்ன் ஃபிளேர் மாவு 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் காலிஃபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பின் கொதிக்கும் நீரில் காலிஃபிளவர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின் வடிகட்டி விட வேண்டும்.
பின் குளிர்ந்த நீரில் காலிஃபிளவரை போட்டு பின் வடிகட்டி விட வேண்டும்.
ஒரு அகலம் உள்ள பாத்திரத்தில் காலிஃபிளவரை சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், அரிசி மாவு, கார்ன் ஃபிளேர் மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
அதில் காலிஃபிளவரை அதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவில் போட்ட காலிஃபிளவரை எடுத்து மெதுவாக சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் குழந்தைகளுக்கு பிடித்த காலிஃபிளவர் பஜ்ஜி தயார்.