ஆட்டுக்கால் பாயா..!
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் 4
எண்ணெய் தேவையானது
பட்டை இரண்டு
வெங்காயம் இரண்டு
தக்காளி நான்கு
கத்தரிக்காய் ஆறு
பச்சை மிளகாய் இரண்டு
இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
அரிசி மாவு ஒரு ஸ்பூன்
தேங்காய் பால் 250 மிலி
கொத்தமல்லி இலை சிறிது
தண்ணீர் தேவையானது
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் ஒரு ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கத்தரிக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
மூன்று ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
மஞ்சள்தூள் கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் ஆட்டுக்கால் 4 துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.
குக்கரில் 500 மிலி தண்ணீர் ஊற்றவும்.
குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை விட்டு பின் அடுப்பை குறைத்து ஒன்றரை மணி நேரம் மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்.
இதில் தேங்காய் பால் 250 மிலி மற்றும் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கிளறி விட்டு சிறிது கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளற வேண்டும்.
அவ்வளவுதான் ஆட்டுக்கால் பாயா தயார்.
ஆட்டுக்கால் பாயா இடியாப்பம், பரோட்டா, ஆப்பம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப சுவையா அட்டகாசமா இருக்கும்.