மொறுமொறு முருங்கைக்கீரை தோசை..!
முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதினால் செரிமான பிரச்சனைகள் மேம்படும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கக்கூடியது.
தேவையான பொருட்கள்:
- எண்ணெய்-1 தேக்கரண்டி
- சீரகம்-1 தேக்கரண்டி
- பூண்டு-2
- சின்ன வெங்காயம்-3
- பச்சை மிளகாய் -2
- முருங்கைக்கீரை-1 கைப்பிடி
மாவிற்கு
- ரவா-1கப்
- அரிசி மாவு-1 கப்
- மைதா மாவு- 3 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம்-2
- கருவேப்பிலை-சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- பச்சை மிளகாய்-2
- முந்திரி-5
- சீரகம்-1 தேக்கரண்டி
- மிளகு-1 தேக்கரண்டி
- இஞ்சி-1 துண்டு
- உப்பு- தேவையான அளவு
- நெய்-தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் சீரகம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் அதில் ஒரு கைப்பிடி அளவு முருங்கைகீரை சேர்த்து வதக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, முந்திரி, மிளகு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன் அரைத்த முருங்கைகீரை விழுது 5 கப் தண்ணீர் சேர்த்து கலந்து 20 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் அதில் முருங்கைகீரை மாவில் ஒரு கரண்டி எடுத்து ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.
- இந்த ஆரோக்கியமான முருங்கைகீரை தோசையுடன் தக்காளி சட்னி, கார சட்னி, தேங்காய் சட்னி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
