செந்தில் பாலாஜி வழக்கு..!! கிடைத்த முக்கிய பாயிண்ட்…!! சிறையா விடுதலையா…?
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் இன்று வர உள்ள நிலையில் வழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெற்று வருகிறது.. கடந்த மாதம் இந்த வழக்கின் மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையில் விசாரணை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கில் இந்த முறை ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…
இவரது வழக்கில் சில முக்கிய வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது… அதாவது
1. செந்தில் பாலாஜியின் வழக்கில் அமலாக்கதுறை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதமாக செயல்படுகிறது.. கடந்த மே 6ம் தேதிக்கு நடத்தப்பட்ட விசாரணைக்கு அமலாக்கதுறை அன்று தான் பதில் மனு அளித்தது..
2. செந்தில் பாலாஜியின் ஜாமீன் வேண்டி தாக்கல் செய்த இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென என கேட்டுக்கொண்டது. அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பதில் மனுவில் கூறியிருப்பதாவது “அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின் எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக இருக்கிறார்.. இந்த வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., எனவும் விசாரணையின் போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என தெரிவித்தது .
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் பதிவிட்டிருப்பதாவது.., 370 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன்.. மிகவும் உடல்நிலை மோசமாக உள்ளது எனவே இடைக்கால ஜாமீனாவது வழங்கும் படி தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர்.. மேலும் அமலாக்கதுறை அதிகாரிகள் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றங்களை முன்வைத்தனர்…
அதற்கு அமலாக்கதுறை மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது. ஏற்கனவே அதை கோர்ட் நிராகரித்து உள்ளது.. எனவே செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனையடுத்து அமலாக்கதுறை அதிகாரிகள் கூறுவதாவது… தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் இருந்தால் வலுவான வாதங்களை வைக்க முடியாது எனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் நியமனம் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஏ.எஸ் ஓஹா பென்ச். இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..