சுவையான சங்குபூ சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா..? வாங்க பார்க்கலாம்..!
பாஸ்மதி அரிசி – 250 கிராம்
சங்குபூ – 40
நெய் – 50 கிராம்
பட்டை -1
கிராம்பு – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
முந்திரி – 10
உப்பு – தேவையான அளவு
- பாஸ்மதி அரிசியை நன்றாக 3 முறை கழுவி ஒரு பாத்திரத்தில் கொட்டி ஊற வைக்க வேண்டும்
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அதில் சங்குபூவை போட்டு கொதிக்க வைத்து சாறு இறங்கியதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- அரிசிக்கு தேவையான சங்குபூ தண்ணீரை ஊற்றி உப்பு கலந்து ஊற வைத்த அரிசியை போட்டு குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும்.
- பின் வறுத்து வைத்துள்ள முந்திரியை போட்டு கிளறிவிட்டால் சுவையான சங்குபூ சாதம் தயார்.
