சனி பயணம் அதிர்ஷ்டம்..! அந்த 3 ராசிகளுக்கு மட்டுமே..!
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சனிபகவான் இந்த ராசிகளில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது மீண்டும் சனிபகவான் இந்த ராசிகளில் பயணிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு வரை இந்த ராசிகளில் பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர்கள் யார் யார் என்பதை இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
மகர ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்வார். இதனால் வேலையில் பதவியுயர்வு, வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு மகர ராசிக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை செய்து அதற்கான வெற்றி எதுவும் கிடைக்கவில்லையா? இந்த காலப்பகுதியில் சாதகமான நன்மைகள் அதிகமாக இருக்கும்.
பணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கிடைக்கும். உங்களின் பேச்சு திறமையால் கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
மிதுன ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்கிறார். இந்த பெயர்ச்சியால் வேலை, பணம், பதவி, குடும்பம் என அனைத்திலும் செழிப்பு உண்டாகும். வேலைக்கான சம்பள உயர்வு நிச்சயம் கிடைக்கும்.
வெளிநாட்டில் வேலைச் செய்ய வேண்டும் என முயற்சிப்பவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சி செய்யலாம். கணவன் – மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காதலில் சண்டை, பிரிவு இருப்பவர்களுக்கு சனி பகவான் நல்லது செய்வார்.
சனி பகவான் குடும்ப ராசியில் வாசம் செய்கிறார். இதனால் மரியாதை, கௌரவம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் வியாபாரத்தில் 2025 வரை நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பிற்கு இந்த காலப்பகுதியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வாழ்க்கை துணை இல்லாமல் கஷ்டப்படுவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..