ஆம்பூர் மட்டன் பிரியாணி..!
தேவையான பொருட்கள்:
மட்டன் அரை கிலோ
அரிசி கால் கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
புதினா கைப்பிடி
கொத்தமல்லி கைப்பிடி
எலுமிச்சை பழம் 1
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
ஊறவைக்க:
மிளகாய் அரை ஸ்பூன்
தனியா அரை ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
தயிர் அரை கப்
மஞ்சள்பொடி கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எலுமிச்சை சாறு 1
அரைக்க 1:
பச்சை மிளகாய் 5
இஞ்சி 1 துண்டு
பூண்டு 10
அரைக்க 2:
முந்திரி 10
சோம்பு கால் ஸ்பூன்
சீரகம் கால் ஸ்பூன்
தாளிக்க:
பிரிஞ்சி இலை
பட்டை
ஏலக்காய்
லவங்கம்
நட்சத்திர மொக்கு
எண்ணெய்
செய்முறை:
மட்டனை நன்றாக நீரில் சுத்தம் செய்து ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து கலந்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரத்திற்கு பின் ஊறவைத்த மட்டனை ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பின் தண்ணீர் தனியாகவும் மட்டன் தனியாகவும் பிரிக்கவும்.
அரைக்க 1-ல் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை தாளித்து பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்த முதல் கலவையை சேர்த்து வதக்க வேண்டும்.
நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா இலைகளை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வேகவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
அரைக்க 2-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை மட்டன் கலவையில் சேர்த்து வதக்க வேண்டும்.
வேகவைத்த மட்டன் நீரை அரிசிக்கு தேவையானதை ஊற்றி,உப்பு சரிபார்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் அருமையான டேஸ்டில் ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார்.