மாநகர பேருந்து கார் மீது மோதி விபத்து… பரபரப்பான ஜி.எஸ்.டி. சாலை..!
சென்னை, பாரிமுனையில் இருந்து நேற்று மதியம் மாநகர பேருந்து ஒன்று கிளாம்பாக்கம் நோக்கி, சென்று கொண்டிருந்தது. மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையில் சிவப்பு சிக்னல் எரிந்ததால், மற்ற வாகனங்கள் நின்றிருந்தன. அப்போது, வேகமாக வந்த மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ‘பிரேக்’ பிடிக்க முடியாமல் சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக மோதியது.
அதனைதொடர்ந்து முன்புறம் நின்றிருந்த ஆறு கார்கள் அடுத்தடுது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில், பேருந்து மோதிய காரில் பயணித்த, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சங்கீதப்பிரியா,34, சாலிகிராமத்தைச் சேர்ந்த மோனிகா, 31, பிரபு, 31, மற்றும் கே.கே.நகரைச் சேர்ந்த கேத்தரின், 24, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், விபத்துகுள்ளான பேருந்து மற்றும் ஆறு கார்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுனர் வெங்கடேசன்(50), என்பவரிடம் விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.
-பவானி கார்த்திக்