நீங்களும் சமையல் ராணி ஆகலாம்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தோசைக்கு மாவு அரைக்கும்போது ஒரு கப் சாதம் சேர்த்து அரைத்து மறுநாள் தோசை ஊற்றினால் மொறுமொறுவென பேப்பர் ரோஸ்ட் வரும்.
- குத்துவிளக்கு வாங்கும்போது மற்ற பாகங்கலை விட அதன் அடிப்பகுதி அகலமானதாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும், அப்போதுதான் எண்ணெய் சிந்தினாலும் தரையில் விழாது.
- எந்தவகை சுண்டல் செய்யும்போது அதில் கேரட், பீட்ரூட் துருவி சேர்த்து கலந்தால் அருமையாக இருக்கும்.
- ரவை இட்லி மீந்து போய்விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
- ரவை வறுக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வறுத்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
- நாட்டு சர்க்கரை ஒரு பாட்டலில் கொட்டி அதில் ஒரு பிரட் துண்டு போட்டு வைத்தால் உலர்ந்து விடும்.
- பூண்டை உரித்து நசுக்கி பின் எள்ளடை மாவில் கலந்து எள்ளடை சுட்டால் நல்லா வாசனையாக இருக்கும்.
- அரிசி உப்புமாவிற்கு அரிசியை ரவை போல உடைக்கும்போது அதனுடன் மிளகாய் சேர்த்து உடைத்தால் நல்லா ருசியாக இருக்கும். மிளகாயும் வீணாகாது.
- கேரட் சூப்பில் வறுத்த சிறிது சேமியா கலந்து செய்தால் சூப் திக்காவும் சுவையாகவும் இருக்கும்.
- தயிர் பச்சடியில் முட்டைக்கோஸ், இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தயிரில் சேர்த்து உப்பு கலந்தால் தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.
- உளுந்து போண்டா செய்யும்போது அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து போண்டா சுட்டால் நல்லா சாஃப்டாக இருக்கும்.