“வேலுநாச்சியார் படமே நான் வரைந்தது..” சீமான் அதிரடி..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு., கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்றது.,
அதில் அக்கட்சி தலைவர் விஜய் சில அரசியல் தலைவர்களை தாக்கி பேசினார்.., அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்..
தற்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்., விஜய் குறித்து பேசியுள்ளார். அது நெட்டிசன்களால் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது..
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் கொள்கை தலைவர்களாக., வேலுநாச்சியார்., காமராசர், அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், போன்ற தலைவர்கள் கொள்கை பரப்பு செயலாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்..
அதேபோல் அக்கட்சி மாநாட்டில் வேலுநாச்சியார்., காமராசர், அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு கட் அவுட் வெக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் நேற்று பெரம்பூரில் நாதக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாளில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாட்டில் இடம் பெற்றுள்ள வேலுநாச்சியார் படம் நான் வரைந்த படம் என குறிப்பிட்டுள்ளார்..
அதற்கு நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்து வருகின்றனர்.. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..