இன்னிக்கு நைட் குழிபணியாரம்..!
தேவையான பொருட்கள்:
1 கப் பச்சை பயிறு
½ கப் உளுத்தப்பருப்பு
¼ கப் இட்லி அரிசி
½ டீஸ்பூன் வெந்தயம்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 டேபிள் ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் கடலை பருப்பு
¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
1 டீஸ்பூன் இஞ்சி
2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சை பயிறு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி ஆகியவற்றை நீரில் கழுவி குறைந்தது 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து நல்லா கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து 5 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக பொரிந்ததும் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் வதக்கியவற்றை ஆறவைத்து மாவில் கொட்ட வேண்டும்.
மாவில் நறுக்கிய கொத்தமல்லி இலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அடுப்பில் பணியார கல்லை வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவில் ஒரு கரண்டி என எடுத்து குழியில் ஊற்றவும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் தடவி பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான குழிபணியாரம் தயார்.
இதனை இரவில் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்.
