“மேகம் கருக்குது”… அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை … வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், மத்திய மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று ( ஆக.29 ) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்வதான் காரணமாக, இன்று (ஆக29) மற்றும் நாளை (ஆக.30), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்