இந்த இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா..?
தேவையான பொருட்கள் :
- மூங் தால் ஒரு கப்
- தயிர் கால் கப்
- எண்ணெய் தேவையானது
- கடுகு அரை ஸ்பூன்
- சீரகம் ஒரு ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
- மிளகாய் இரண்டு
- இஞ்சி 1 துண்டு
- கறிவேப்பிலை சிறிது
- நறுக்கிய முந்திரி சிறிது
- கேரட்
- பெருங்காயம்
- பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது
- உப்பு தேவையானது
- பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மூங்தால் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதில் கால் கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, நறுக்கய மிளகாய், வெங்காயம், நறுக்கிய இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் கேரட் சேர்த்து வதக்க வேண்டும்.
இதனை மூங்தால் விழுதில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இட்லி ஊத்துவதற்கு அரை மணி நேரம் முன்பு பேக்கிங் சோடா கலந்து அரை மணி நேரத்திற்கு மாவை புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் இந்த மாவில் இட்லி ஊத்தி எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மூங்தால் இட்லி தயார்.