ADVERTISEMENT
கன்டெய்னர் லாரி மீது கனரக லாரி மோதி விபத்து..!
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் நேற்று பணிக்கு சென்ற இவர், துறைமுகத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இரும்பு உருளைகள் ஏற்றி, வந்தார்.
அப்போது அதிகாலை 2 மணியளவில், ஓய்வெடுப்பதற்காக மாதவரம் அருகே மஞ்சம்பாக்கத்தில் சாலையோரம் லாரியை நிறுத்திய அவர், லாரியிலேயே படுத்து உறங்கியுள்ளார்.
இவரது லாரியின் முன்னே, இரும்பு தகடுகளை ஏற்றி வந்த கனரக லாரி நிறுத்தப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை வந்தவாசியைச் சேர்ந்த மகேந்திரன், என்பவர் கிளம்புவதற்காக ‘ரிவர்ஸ்’ எடுத்துள்ளார்.
அப்போது, எதிர்பாரத விதமாக பாலமுருகனின் கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் மோதியது. இதில் பாலமுருகனின் லாரியில், இரும்பு உருளை கட்டப்பட்டிருந்த செயின் அறுந்து, லாரியின் முன் பக்கத்தை உடைத்துக் கொண்டு உருண்டு கீழே விழுந்தது. இதில் லாரிக்குள் பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓட்டுநர் மகேந்திரனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.