சூப்பரான கடலை மாவு தோசை செய்யலாமா…!
கடலை மாவு 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானவை
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
கசூரி மேத்தி 1 ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
இஞ்சி 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
குடை மிளகாய் 1 நறுக்கியது
தக்காளி 1 நறுக்கியது
கொத்தமல்லி நறுக்கியது
எண்ணெய் தேவையானவை
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காய்த்தூள், ஓமம், கசூரி மேத்தி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
வெங்காயம்,இஞ்சி,மிளகாய்,கேரட்,குடைமிளகாய்,தக்காளி,கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடு செய்து கரண்டி மாவை எடுத்து ஊற்றி தேய்த்து கொள்ளவும்.
சுற்றிலும் எண்ணெய் தடவி மறுபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கடலை மாவு தோசை தயார். இத்துடன் தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.