சுவையான மட்டன் கோலா உருண்டை ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
மட்டன் கொத்துக்கறி – 500 கிராம்
எண்ணெய்
உப்பு
சோம்பு – 1 தேக்கரண்டி
கச கசா – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
வறுத்த பொட்டுக்கடலை – 1 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி
பூண்டு
கிராம்பு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
கறிவேப்பிலை
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
முட்டை – 1
கொத்தமல்லி இலை
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,கசகசா,சோம்பு,முந்திரி, பொட்டுகடலை,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்,கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
அதற்கு பிறகு மட்டன் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கி ஆறவைக்க வேண்டும்.
ஆறிய கலவையை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையில் முட்டை உடைத்து ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அந்த உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.