10வது தேசிய கைத்தறி தினம்… சிறப்பு கண்காட்சியை துவங்கி வைத்த ஆட்சி தலைவர்..!
அரியலூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி, துவக்கிவைத்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10-வது தேசிய கைத்தறித் தினத்தினை முன்னிட்டு கைத்தறித்துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்டஆட்சித்தலைவர் இரத்தினசாமி, துவக்கி வைத்துப்பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டார். தேசிய கைத்தறிநாள் 2015-ம் ஆண்டுஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்றையதினம் 10-வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்துப்பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் திருபுவனம் அசல் பட்டுசேலைகள், ஆஃபைன்பட்டுசேலைகள், வெங்கடகிரி பருத்தி சேலைகள் மற்றும் பட்டு வேஷ்டிகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் 4.50 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளையும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 2 நெசவாளர்களுக்கும், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 8 நெசவாளர்களுக்கும் மாதந்தோறும் 1200/- வீதம் உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறித்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்