வெள்ளபெருக்கில் சிக்கிய நபர்களை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்… குவியும் பாரட்டு..!
தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விட்ட நிலையில், நேற்று நள்ளிரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், வடக்கு மலை, குரங்கணி, போடி மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்த அதீத கனமழை காரணமாக அத்தியூத்து என்ற வனப் பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு கொழுக்குமலை எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு தோட்ட பராமரிப்பில் ஈடுப்பட்டிருந்த 5பேர் மற்றும் 5 குழந்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளப்பெருகில் சிக்கிக் கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் இன்று காலை சம்பவ இடத்தி விரைந்தனர்.
இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி இருந்த பத்து பேரையும் கயிறுகள் மூலம் மீட்பு படையினர் இவர்களை உயிருடன் மீட்டனர்.
மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தொழிலாளர்களை பணிக்கு செல்ல வேண்டாம் எச்சரித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்