நெய்யப்பம் சாப்பிட்டு இருக்கீங்களா..?
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு
கோதுமை மாவு
பழுத்த வாழைப்பழம்
நறுக்கிய தேங்காய் துண்டுகள்
ஏலக்காய் பொடி
வறுத்த எள்
வெல்லம்
நெய்
எண்ணெய்
செய்முறை:
ஒரு வாணலில் நெய் சேர்த்து நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலில் அரிசி மாவு மற்றும் கொதுமை மாவை வறுத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை பாகு தயாரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு,கோதுமை மாவு,வறுத்த தேங்காய் துண்டுகள், பிசைந்த வாழைப்பழம் ,வெல்லப்பாகை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.
அந்த மாவை அரை மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பின் அதில் ஏலக்காய்த்தூள்,வறுத்த எள், சிட்டிகை உப்பு கலந்து கொள்ளவும்.
பணியார அடுப்பில் நெய் சேர்த்து மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான் நெய்யப்பம் தயார்.