வெள்ளை குருமா..! வெந்தயக்கீரை சப்பாத்தி..!
தேவையான பொருட்கள்:
தேங்காய் அரை கப்
பெருஞ்சீரகம் அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
கிரேவிக்கு:
எண்ணெய் 2 ஸ்பூன்
பிரியாணி இலை 2
ஸ்டார் ஆனஸ் 1
பட்டை ஒரு துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 4
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பீன்ஸ் 5
உருளைக்கிழங்கு 1
பேபி கார்ன் 3
கேரட் 1
பச்சை பட்டாணி கால் கப்
கொத்தமல்லி இலை சிறிது
புதினா இலை சிறிது
உப்பு தேவையானது
மல்லித்தூள் அரை ஸ்பூன்
கரம் மசாலா அரை ஸ்பூன்
தண்ணீர் 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை 2, ஸ்டார் ஆனஸ் 1, பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, கிராம்பு 4 சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி, கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் உப்பு,கரம் மசாலா,மல்லித்தூள், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
அனைத்தும் கொதித்து வெந்ததும் வெள்ளை குருமா தயார்.
சப்பாத்தி மாவில் காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து மாவு பிசைந்து சப்பாத்தி சுட்டுக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் வெந்தயக்கீரை சப்பாத்தி மற்றும் வெள்ளை குருமா தயார்.