சுவையான பொடி மினி இட்லி..!
இந்த பொடி இட்லியானது காரசாரமாக அரைத்த பருப்பு கலவையுடன் நெய் சேர்த்து உருவான ஒரு உணவாகும். நீங்கள் வீட்டில் செய்யும் வழக்கமான இட்லியை காட்டிலும் இது மிகவும் சுவையாகவும் சாப்பிட சூப்பராகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் 3
வேர்கடலை 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
எள் 1 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
இட்லி
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் வேர்கடலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வெறும் வாணலில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சீரகம், எள், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து லேசாக அனைத்தையும் வறுத்து பின் ஆறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு அரை ஸ்பூன், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அடுப்பை அணைக்கவும்.
தயாரித்து வைத்துள்ள மினி இட்லிகளை சேர்த்து பொடி தூவி கிளறி விட வேண்டும், தேவைப்பட்டால் நெய் ஊற்றி கிளறவும்.
கடைசியாக கறிவேப்பிலை இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பொடி மினி இட்லி தயார். இதை காலை உணவாகவும் அல்லது மாலையில் ஸ்நாக்ஸாகவும் செய்து சாப்பிடலாம்.