திண்டுக்கல் மட்டன் பிரியாணி..!
தேவையான பொருட்கள்:
மசாலா பொடி அரைக்க
முழு தனியா – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 10
சீரகம் – 1 மேசைக்கரண்டி
கல்பாசி – 1 1/2 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 6
முழு மிளகு – 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை – 2
அன்னாசி பூ – 2
பட்டை – 2 துண்டு
ஜாவித்ரி – 2 துண்டு
கிராம்பு – 10
ஜாதிக்காய்
சோம்பு – 1 மேசைக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
சின்ன வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 5 பற்கள்
இஞ்சி – பெரிய துண்டு
பிரியாணி செய்ய
மட்டன் – 1 கிலோ
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
கல்லுப்பு – 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 பழம்
தயிர் – 200 கிராம்
புதினா இலை
கொத்தமல்லி இலை
சீரக சம்பா அரிசி – 2 கப்
வாழை இலை
செய்முறை:
ஒரு குக்கரில் சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
சீரக சம்பா அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
மசாலா தூள் அரைக்க ஒரு மிக்ஸியில் மசாலா பொடி அரைக்க தேவையான பொருட்களை எல்லாம் அதில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா விழுது அரைக்க ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிரியாணி செய்ய ஒரு பாத்திரத்தில் நெய்,எண்ணெய் சேர்த்து அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த மசாலா பொடி,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த மட்டன் துண்டுகள் சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் தயிர்,எலுமிச்சை சாறு,புதினா இலை,கொத்தமல்லி இலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் மட்டன் வேகவைத்த தண்ணீர் ஊற்றவும்.
பின் அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறி பின் அதில் கொத்தமல்லி இலை,புதினா இலை மற்றும் நெய் சேர்த்து பாத்திரத்தை மூட வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து அந்த பாத்திரத்தில் மேல் ஒரு கனமான பொருளை வைத்து 20 நிமிடங்களுக்கு வேகவைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் திண்டுக்கல் மட்டன் பிரியாணி தயார்.