பட்டர் எக் முகலாய் ரெசிபி செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
ஆம்லெட் செய்ய
முட்டை – 1
உப்பு
மிளகாய் தூள்
மிளகு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
வேகவைத்த முட்டை
கிரேவி செய்ய:
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
தக்காளி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
ஆம்சுர் பவுடர் – 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
வறுத்த முட்டை செய்ய
வெண்ணெய் – 1 தண்ணீர்
முட்டை
பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை
செய்முறை:
முட்டையை முதலில் வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
வேகவைத்த முட்டையை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முட்டை ஆம்லெட் செய்ய முட்டை உடைத்து ஊற்றி அதில் உப்பு,மிளகாய்த்தூள்,மிளகுத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவை ஊற்றி அதன் மேல் நறுக்கிய முட்டைகளை வைத்து ஆம்லெட் செய்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் வெண்ணெய் சேர்த்து கரைந்த பின் அதில் நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சாட் மசாலா தூள்,கரம் மசாலா தூள்,மல்லித்தூள்,ஆம்சூர் பவுடர் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்
ஒரு தோசைக்கல்லில் வெண்ணெய் சேர்த்து கரைந்த பின் அதில் துண்டுகளாக வெட்டி வைத்துள்ள முட்டை,பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தட்டில் முட்டை ஆம்லெட், கிரேவி மற்றும் வறுத்த முட்டை துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான பட்டன் எக் முகலாய் தயார்.