ருசியான எஃக் கொத்து சப்பாத்தி ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- இரண்டு பெரிய வெங்காயம்
- ஐந்து சப்பாத்தி
- எண்ணெய்
- கடுகு
- ஒரு துண்டு பட்டை
- இரண்டு கிராம்பு
- இரண்டு ஏலக்காய்
- இரண்டு பச்சை மிளகாய்
- இஞ்சி பூண்டு விழுது
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- மஞ்சள் தூள்
- அரை டீஸ்பூன் கரம் மசாலா
- கருவேப்பிலை
- அரை டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு
- இரண்டு தக்காளி
- நான்கு முட்டை
- மிளகுத்தூள்
- கொத்தமல்லி இலை
செய்முறை:
- முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- அனைத்தும் நன்றாக மசிந்து வந்ததும் வாணலில் வதக்கியவற்றை ஓரமாக தள்ளிவிட்டு நடுவில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து அப்படியே மூடி வைக்கவும்.
- பின் முட்டையை கிளறி விட வேண்டும்.
- பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து கிளறிவிட்டு கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் எஃக் கொத்து சப்பாத்தி தயார்.