பிரதமர் மோடி பிறந்தநாள்..!! 26 லட்சம் ஆவாஸ் யோஜனா வீடுகள் திறப்பு..!!
1950-ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி குஜராத் மாநிலம் மெஹசானா என்ற மாவட்டத்தில் நரேந்திர மோடி பிறந்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய வாழ்க்கையை அரசியலிற்காக மட்டுமே அர்ப்பணித்தார்..
இன்று பிரதமர் மோடி தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய தசாப்தகால பொது சேவையாக சேர்க்கப்பட்டு வருகிறது.. அதேபோல் இந்த ஆண்டும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை தசாப்தகாலமாக சேர்கப்பட்டுள்ளது..,
இந்த ஆண்டிலும் தன்னுடைய அதிகாரப்பூர்வ பொறுப்புகளை பிரதமர் மோடி அர்ப்பணிக்கப்பட்டுள்ள தாக சொல்லப்படுகிறது.. மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பாஜக சார்பில் “சேவா பர்வ்” இரண்டு வார விழா நடத்தப்பட்டு வருகிறது..
பிரதமர் ஆவாஸ் யோஜனா கனவு வீடு :
பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு., பொதுமக்களுக்காக அவர் வழங்கும் சேவை குறித்து இவ்விழாவில் பேசபடுவது வழக்கம்.. இந்த ஆண்டில் பிரதமர் மோடி தனது 74வது பிறந்தநாளை புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் “பிரதமர் ஆவாஸ் யோஜனா கனவு வீடு” என்ற திட்டத்தின் கீழ் 26 லட்சம் வீடுகள் திறக்கப்படவுள்ளது..
அதனை தொடர்ந்து அவர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பேசவுள்ளார். அதன் பின் புவனேஸ்வர் விமான நிலையத்தை வந்தடைந்ததும், பிரதமர் மோடி சைனிக் பள்ளிக்கு அருகில் உள்ள கடகனா குடிசைப்பகுதிகளுக்கு செல்ல இருப்பதால் அங்கு பாதுகாப்பு பணிகள் கமிஷனர் சஞ்சீவ் பாண்டா தலைமையில் நடந்து வருகிறது..
அதனை தொடர்ந்து சுபத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி ஜனதா மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் அதிகமான ஏழைப் பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10,000 ரூபாய் என ஐந்தாண்டு காலத்திற்கு இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது..
ஓடிசாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் கீழ் சுபத்ரா யோஜனா நிதி உதவித் திட்டத்தை பாஜக அறிவித்திருந்தது.. அதில் 2,871 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களையும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே பிறந்தநாள் வாழ்த்து :
இன்று தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடி வரும் பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
“பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா பொருளாதார வல்லரசாக மாறுகிறது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற அவரது உறுதியை நிறைவேற்ற அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பிரதமர் மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற மகாராஷ்டிராவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடு, 21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்று நான் கூற விரும்புகிறேன், ஏனெனில் நாட்டின் கேப்டன் பிரதமர் மோடி, அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்., தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..