இன்று புரட்டாசிக்கு கோவக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க..!
ADVERTISEMENT
தேவையான பொருட்கள்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- கோவக்காய் 250 கிராம்
- வெங்காயம் 1
- தக்காளி 1
- மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 1
- கறிவேப்பிலை சிறிது
- எண்ணெய் 2 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- தண்ணீர் தேவையானது
செய்முறை:
- முதலில் கோவக்காயை மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு ஃபேனை அடிப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- தக்காளி மென்மையானதும் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
- நறுக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வேகவைக்கவும்.
- தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் காரசாரமான கோவக்காய் பொரியல் தயார்.
- இந்த கோவக்காயை இன்று சனிகிழமையில் பெருமாளுக்கு சமைத்து படைங்க.
- உங்களுக்கு விருப்பமானால் கொஞ்சமாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி விடலாம் சூப்பராக இருக்கும்.