சுவையான எள்ளு சாதம்..!
கலடை பருப்பு 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 8
மிளகு 1 ஸ்பூன்
புளி தேவையானது
கொப்பரை தேங்காய் 1 ஸ்பூன்
எள்ளு 3 ஸ்பூன்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
வேர்க்கடலை 1 ஸ்பூன்
முந்திரி தேவையானது
கடுகு அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பிலை தேவையானது
வேகவைத்த சாதம்
எள்ளு பொடி 3 ஸ்பூன்
உப்பு தேவையானது
நெய் தேவையானது
ஒரு வாணலில் எள்ளு பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து வறுத்து ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,வேக்கடலை,முந்திரி சேர்த்து வறுக்கவும்.
பின் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து அரைத்த எள்ளு பொடியை சேர்த்து கிளறி கடைசியாக நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான எள்ளு சாதம் தயார்.