வழக்கறிஞர்களே இப்படி செய்யலாமா… நீதிமன்றத்தில் பரபரப்பு..!
சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழக்கம் போல் நேற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.
அப்போது மதியம் 1.15 மணியளவில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் வழக்கறிஞர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர்கள் இருவர்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறி 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இரு தரப்பாகப் பிரிந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் பலமாகத் தாக்கிக் கொண்டதால் நீதிமன்ற வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்து பரபரப்பான சூழல் நிலவியது.
மோதல் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். மோதல் காரணமாக 5 வழக்கறிஞர்கள் காயமடைந்ததால் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்ப்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்