செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ குழம்பு..!
தேவையான பொருட்கள்:
வாழைப் பூ – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்த பின் அந்த பூவை மோரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
இதில் வாழைப்பூவை சேர்த்து வதக்க வேண்டும். இதில் அரை கப் நீர் சேர்த்து கிளறி கொதிக்க வைக்கவும்.
புளிக்கரைசல் சேர்த்து சிறிது கொதித்து வந்ததும் தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கலாம்.
அவ்வளவுதான் வாழைப்பூ குழம்பு அட்டகாசமா தயார்.