“சின்னப்பயலே சின்னப்பயலே.. சேதி கேளடா” அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சி பாஜக..!! அண்ணாமலையை விளாசிய செல்லூர் ராஜு..!!
அண்ணாமலை போன்றவர்களுக்காக தான் 60 ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடல் பாடி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.. கூவத்தூரில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி., அவர்களின் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசியதை திமுகவின் மூத்த அமைச்சர்களே ஏற்றுக்கொள்ள முடியதா போது., மற்றவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இருப்பது தான் நிதர்சமான உண்மை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
நீட் தேர்விக்கு விலக்கு வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்த போது போரடியது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். அதனால் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவக்கல்லூரி படிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சினிமாதுறையில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜீ.ஆர் ஆகிய இரண்டு தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கமால் யாராலும் அரசியல் செய்ய முடியாது என்பதை இது காட்டுகிறது..
அரசியல் நாகரீகத்துடன், யதர்த்தமாக பேசும் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை மிகவும் தரம் தாழ்த்தி பேசி வருகிறார். அவர்கள் இருவரின் பேட்டிகளை ஓப்பிட்டு பார்த்தாலே தெரியும் யாருக்கு தகுதி இருக்கு யாருக்கு தகுதி இல்லை என்பதை பார்க்க முடியும்..
“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா, எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா.. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி..” என்று அண்ணாமலை போன்றவர்களுக்காக தான் 60 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் இந்த பாடலை பாடி வைத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்து எடுத்துதோம்.பாஜக மாதிரி வேறு எந்த கட்சி எம்.எல்.ஏக்களை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் துயரப்பட்டு இருந்த எங்களுடன் அவருடைய நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.
அதிமுகவின் 124 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கையெழுத்துயிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்து எடுத்துதோம்.. பாஜக மாதிரி வடமாநிலங்கள் குழப்பம் செய்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த மாதரி நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை
கர்நாடக மாநிலத்தில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குழப்பத்தினை ஏற்படுத்த பாஜக முயன்று வருவதாக செய்து வருகிறது. கூவத்தூரில் எங்களுடன் அப்போது இருந்த சசிகலாவிடம், எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றதாகவும், அதில் அரசியல் இல்லை, அப்படி பதவி வாங்க வேண்டிய அவசியமும் எழவில்லை. அப்போது அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை..
வடமாநிலங்களில் பாஜக அசிங்கமான அரசியல் நடத்தி பேரம் பேசி, ஆட்சியை கவிழ்த்து, அரசியலை கேலி கூத்தாக்கிய கட்சி பாஜக.. இடதிற்கு ஏற்றவாறு பேச வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த பேசியுள்ளார். இதில் உள் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை, புத்தகம் வெளியீட்டு வெளிவில்லை அதை பற்றி பேசமால் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பற்றி மூத்த அமைச்சர் துரைமுருகன் பதில் கூறி இருக்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..