சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பொன்னி அரிசி சாதம் 1 கப்
வேர்கடலை 1/3 கப்
வெள்ளை எள் 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
துருவிய தேங்காய் 1/4 கப்
நெய் 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
செய்முறை:
அரிசியை முதலில் கழுவி நீரில் 20 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கும் சமைத்தில் அரிசியை போட்டு முக்கால் பதத்திற்கு வேகவைக்கவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வேர்கடலை, எள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
பின் அதனை ஆற வைக்கவும்.
அதே ஃபேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாயை வறுத்து அதையும் ஆறவைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்தையும் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதில் அரைத்த பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
கடைசியாக உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் உப்பு போட்டு கிளறி விடலாம்.
ஒரு சிறிய ஃபேனில் கொஞ்சமாக நெய் விட்டு அதில் கடுகு ஒரு ஸ்பூன் சேர்த்து பொரிந்ததும் அதில் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும்.
இதனை கிளறி வைத்துள்ள சாதத்தில் போட்டு கிளறவும்.
அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.