சென்னைக்கு ஆரஞ்சு அலார்ட்…!! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட உத்தரவு..!!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது., இந்த ஆண்டு பருவமழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில்
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை கையாளுவதற்கான முன்னெரிச்சை நடவடிக்கைகள் குறித்த பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது..
அதிலும் குறிப்பாக சென்னை., அண்ணாசாலை, கோட்டூர்புரம்., அடையார்., முடிச்சூர்., தாம்பரம்., பாடி வியாசர்பாடி., வில்லிவாக்கம் மற்றும் புழல்., அயனாவரம்., மயிலாப்பூர்., திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தமிழக அரசு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…
இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதற்காக ரிப்பன் மாளிகையின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டடார். சென்னைக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளதை தொடர்ந்து., சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.. என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.