ரசம் அதிக ருசியாக வேண்டுமா? இத ட்ரைப் பண்ணுங்க..!
ஒரு வாணலில் தனியா 2 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வறுத்துக் கொண்டு ஆறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து 2 நறுக்கிய தக்காளி,பூண்டு 2 நறுக்கியது,கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் கால் கப் புளிக்கரைசல்,மஞ்சள்தூள் கால் ஸ்பூன், தண்ணீர், கால் கப் வேகவைத்து மசித்த துவரம்பருப்பு,உப்பு, பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
மற்றொரு வாணலில் நெய் 1 ஸ்பூன் சேர்த்து சூடானதும் கடுகு 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, சீரகம் கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் காப் ஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி,இதனை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும்.
அவ்வளவுதான் இப்படி ரசம் செய்து பாருங்க ரொம்ப ருசியாக இருக்கும்.