முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள்..!! எடுக்கப்போகும் நடவடிக்கை..!! வேல்ராஜ் அதிரடி
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் வேல்ராஜ் இன்று பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.. இந்நிலையில் நம்மதிமுகம் செய்தியாளர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது பல்வேறு தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளார்..
அப்போது அவர் பேசியதாவது, கடந்த “10 நாட்களுக்கு முன் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் நியமனம் நடத்தப்பட்டது.., ஆனால் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.. அது சம்மந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள 295 பொறியியல் கல்லூரிகளில் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலியாக பல்வேறு கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்..
நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறுகளில் இருந்து பதவி ஓய்வு பெற்றாலும் கூட.., விசாரணை செய்வதற்கு என்று குழுவை அமைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.. அந்தக் குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் கன்வினர் கமிட்டிகள் அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
பொறியியல் கலந்தாய்வு (Counseling) நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களின் செல்போன் எண்கள் போன்ற விபரங்களை தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் எங்கள் கல்லூரி தான் நல்ல கல்லூரி என்றும்., மாணவர்களுக்கான கலந்தாய்வில் இந்த குரூப்பை மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அங்குள்ள ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை பொருத்தவரையில் மாணவர்களின் நலனை கருதி அண்ணா பல்கலைக்கழகம் செயல்படும். அந்த முறைகேடுகள் நடைபெறுவது உறுதியாக்கப்பட்டாலோ அல்லது ஆதரங்கள் கிடைத்தாலோ சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என. அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்ய்யப்படும், கல்லூரிகளுக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி இனி இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கல்லூரிகளில் பணியாற்ற முடியாத அளவுக்கு கையெழுத்திடப்படும்..
கணினி பிரிவில் சேரும் மாணவர்களுக்கு அதிக ஊதியத்தில் சம்பளம் கிடைத்தாலும் 30 வயதுக்கு மேல் அவர்களால் அதை தொடர்ந்து செய்ய முடிவதில்லை.. ஆனால் மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகளில் முதலில் ஊதியம் குறைவாக இருந்தாலும் அனுபவம் அதிகரிக்க, அதிகரிக்க ஊதியம் அதிகரிக்கும். தொடர்ந்து இதில் 60 ஆண்டுகள் வரை பணியாற்றும் வாய்ப்பு இருக்கும்.
எனவே மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கணினி தேர்வு செய்ய வேண்டாம் என்பது நோக்கமல்ல அதே கணினி துறையில் சாதிக்கும் அளவிற்கு உங்களுக்கான திறன் இருக்கு வேண்டும்.. முதலில் மாணவர்கள் ஊதியம் கிடைக்கும் துறையை தேர்வு செய்யவேண்டும்..
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய காலத்தில் ஆராய்ச்சிக்காக 17 மையங்களை உருவாக்கினோம்.., பேராசிரியர்களை நியமித்துள்ளோம்., மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து அதிகளவில் நிதி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளை இணைய வழியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், யோகா உள்ளிட்ட படிப்புகள் இணைய வழியில் வழங்கப்பட உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்தின் தரம் உலக அளவில் தெரிவதற்கு வாய்ப்புள்ளதாக” கூறினார்.