அடுத்த முறை இதை முயற்சி செய்து பாருங்க..!
வெங்காயம் பூண்டு ஆகியவற்றை நறுக்கிய பின் கைகளில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கழுவினால் வாடை போய்விடும்.
மைசூர்பாகு, பிரட், பர்பி, அல்வா ஆகியவற்றை வெட்டும் கத்தியை சூடு செய்து வெட்டினால் பிரிறு இல்லாமல் நறுக்கலாம்.
பச்சை மிளகாயை கீறியபின் எலுமிச்சை சாறில் ஊறவைத்து பின் வெயிலில் காயவைத்து தயிர் சாதம் சாப்பிடும்போது பொரித்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆப்பிளை வெட்டி வைக்கும்போது நிறம் மாறாமல் இருக்க வெட்டியபின் சர்க்கரை நீரில் போட்டு எடுத்தால் நிறம் மாறாது.
அரிசியில் புழுக்கள் மற்றும் வண்டுகள் வராமல் இருக்க அதில் சிறிது வேப்பிலை சேர்த்து வைக்கலாம்.
வாழை இலை காயாமல் இருக்க பேப்பரில் கட்டி சுருட்டி வைக்கலாம்.
மூலிகை கீரைகளை அப்படியே வைக்காமல் பிளாஸ்டிக் கவரில் வைக்க நிறம் மாறாது.
கேஸ் ஸ்டவ் பயன்படுத்தியப்பின் பேப்பர் பயன்படுத்தி துடைக்க பளிச்சென்று இருக்கும்.
சப்பாத்தி மிருதுவாக இருக்க தோசைக்கல்லில் போட்ட உடனே எண்ணெய் தடவாமல் சிறிது வேகவைத்து பின் எண்ணெய் தடவினால் சாஃப்ட்டாக இருக்கும்.
சாம்பாரில் சிறிது புளிப்பு தன்மை அதிகமானால் நாட்டு சர்க்கரை சிறிதளவு சேர்க்க புளிப்பு குறையும்.
சர்க்கரை நீர்த்து போகாமல் இருக்க அதில் சில கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வைக்கலாம்.
பலகாரம் செய்யும்போது எண்ணெய் பொங்கி வழியாமல் இருக்க முதலில் சில கொய்யா இலையை போட்டு எடுத்து பின் பலகாரம் செய்யலாம்.
ஆரஞ்சு பழங்களின் தோலை எரியாமல் தேநீர் தயாரிக்கும்போது அந்த தோலை சேர்த்து கொதிக்கவைத்து தேநீர் செய்ய மணமாக இருக்கும்.
உப்பு அதிகமாக உள்ள ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை தவிர்க்க உயர் ரத்த அழுத்தம் குறையும்.